சுலபம், சிரமம்
பழகுவது சுலபம்
பழக்குவது சிரமம்
படிப்பது சுலபம்
படைப்பது சிரமம்
பாடுவது சுலபம்
பயிலுவது சிரமம்
தேடுவது சுலபம்
தோன்றுவது சிரமம்
அடக்குவது சுலபம்
அடங்குவது சிரமம்
ஆள்வது சுலபம்
ஆளப்படுவது சிரமம்
சட்டங்கள் சுலபம்
சமாளிப்பது சிரமம்