வர்ணிக்கத் தெரியவில்லை

சொல்லத் தெரியவில்லை
ஆனால் சொல்லத் தோன்றுகிறது....
வர்ணிக்கத் தெரியவில்லை
ஆனால் வர்ணிக்கத் தோன்றுகிறது....
அதனால் சொல்கிறேன்

உருண்டு பறக்கும்
விழிகளின் கருவண்டுகளை
பாராட்டவா??

சொல்ல வந்த வார்த்தைகளை
சொல்லத் தயங்கும்
அந்த பட்டாம்பூச்சி
இதழ்களை வர்ணிக்கவா??

ஒரு முறை கூட
அடங்கமாட்டேன் என்று
துள்ளாட்டம் போடும்
கூந்தலை உயர்த்திச் சொல்லவா??

உன் நெற்றியால் பொட்டிற்கு அழகா?
அல்லது நீ வைத்த பொட்டினால்
நெற்றிக்கு அழகா??

வீணையை நீ மீட்ட
விரல்கள் பிறந்ததா?
அல்லது நீ தொட
வீணை பிறந்ததா??

எதை சொல்ல?
எதை விட??
வர்ணிக்கத் தெரியவில்லை
ஆனால் வர்ணிக்கத் தோன்றுகிறது....
அதனால் சொல்கிறேன்
முழுமையடையாத கவிதை...
முற்றுப் பெறாத
உன் வார்த்தைகள் போல......

எழுதியவர் : சாந்தி (3-Jul-14, 11:17 pm)
பார்வை : 411

மேலே