நெஞ்சழுத்தம்
இறைவனே!
உன்னைச் சாடுகிறேன்...
இந்த வாழ்வை வழங்கியதற்காக...
மா நிலத்தில் ஒற்றை மரமாக்கியதற்காக ...
வன்மங்களினூடே எனை மென்மையாக்கியதற்காக...
நம்பிக்கையை என்னுள் விதைக்காமல் புதைத்தற்காக...
ஆக்கபூர்வமான செயல்கள் செயவிக்காததற்காக...
எங்கு சென்றாலும் எனை இரக்க வைப்பதற்காக...
எல்லா இடங்களிலும் என் பிம்பங்களை உடைப்பதற்காக...
சுற்றிலும் சுற்றத்திலும் எனை விடுவித்ததற்காக...
ஆனந்தத்தை அவ்வப்போது மட்டும் வழங்குவதற்காக...
விதியை உண்மை என்று நம்பவைத்ததற்காக...
இறைவனே !
உன்னை வணங்குகிறேன்...
நான் சாடுவதற்கு நீ ஒருவனாவது இருக்கிறாயே..
அதற்காக...

