வேலையாள் எல்லாம் காளைமாடா

மிட்டார் மிராசுதார் பண்ணையார்
விட்டார் மக்களும் அழைப்பதை !

மனிதனாய் பிறந்தால் சமம்தானே
மண்ணிலே என்றும் வாழும்வரை ​!

கைகட்டி நிற்பர் குப்பனும் சுப்பனும்
கைநீட்டி ஊதியம் வாங்குவதாலே !

அடிமையா என்ன ஆண்மகன்தானே
அடிமையாய் இருந்தே பழகிட்டோம் !

பிரித்தது என்ன பிறந்திட்ட பூமியிலே
பிரித்து பார்ப்பதே காசும் பணமும்தான் !

வேலையாள் எல்லாம் காளைமாடா
வேலிதான் எதற்கு இடையில் அங்கு !

காலம் மாறியதால் ஞாலமும் மாறியது
​கால் சட்டையே இன்று நவீனமானது !

தாழ்ந்த மக்களென தரணியில் கூடாது
தாழ்வு நிலையே உள்ளத்தில் கூடாது !

இணைந்தே இருப்போம் மனிதராய் நாம்
இருப்பவன் இல்லாதவன் பேதமின்றியே !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (4-Jul-14, 2:16 pm)
பார்வை : 99

மேலே