நானாக நான்
உலகில் என்னைப்போல் யாருமில்லை
நானேஇங்கே நானாக இல்லை
உண்மையாய் வாழ எண்னியிருந்தேன்
கடன்காரனைக் கண்டதும் மறந்துவிட்டேன்
ஏழைக்கு உதவ நினைத்திருந்தேன்
முதலாளி என்னை ஏழையென்றான்
பாசம் நிறைந்தவனாய் நானிருந்தேன்
என்னை பைத்தியமென்றதால் மாறிவிட்டேன்
கொள்கையோடுதான் வளர்ந்து வந்தேன்
சிலர் கொள்கைகொன்றதால் விட்டுவிட்டேன்
வென்பனியாய் இருந்த என்னை
வெந்நீராய் மாற்றிய உலகில்
நானாக நான் இருக்கவே
நான்கு முகமூடி சுமக்கின்றேன்
என் முகம் அழுதபோதும்
என் முகமூடி சிறிக்கின்றதே..
முகமூடி சிறித்தபோதும் என்னுள்
நானகவே நான்வாழத் துடிக்கிறேன்