மதுரை மல்லி

எண்ணிக்கையில் வியாபாரம்
எண்ணங்களில் மனமூட்டும்
மனதை குஷி படுத்தும்
மணத்தை நடத்தி வைக்கும்
மக்கள் முடியில் மலரும்
மன்னர் முடியில் ஏறும்
வெள்ளை நிறத்தின் சின்னம்
பிள்ளை மனதின் ஸ்வரூபம்
ஐஸ்வர்யத்தின் அடையாளம்
தமிழ் மண்ணின் மலராகும்
நல்லது கெட்டது யாவிலும்
மக்களோடு கலந்து கொள்ளும்
மொட்டுக்கள் மலரட்டும்
மெட்டுக்கள் உதிரட்டும்
மீனாக்ஷி அம்மனின் அருளால்
மதுரையம்பதி நிறையட்டும்