கவிதை

மொழி பேனாவில்
கண்ணீர் மை நிரப்பி
காகித நண்பனிடம்
கவிஞனின் மனக்குமுறல்!

இயற்கை மீதான
கவிஞனின் காமத்தால்
பிறக்கும் குழந்தை!

கன்னியின் காதலால்
கருவுற்ற கவிஞனின்
சிந்தனை பிரசவத்தில்
பிறந்த குழந்தை!

எழுதியவர் : (5-Jul-14, 2:13 pm)
சேர்த்தது : மகேஷ்வரன்
Tanglish : kavithai
பார்வை : 69

மேலே