கடல் கடந்து ஒரு மடல்
அக்கறை சுடு மணலில் உன்
ஆசையெல்லாம் கருகிடிச்சு
இக்கரையில் இந்த உறவெல்லாம்
உன் காச மட்டும் பாத்திருக்கு
சொந்தமெல்லாம் வந்த வினை
கூடி உன்னை குறை சொல்லும்
உடன் பிறப்பும் கடன் பிறப்பு
உரிமை கொள்ள காசு கேட்கும்
மச்சான் இருந்தா மலை ஏறு
பொழைக்கலாம் இது பழமொழி
ஏற விட்டு உன் கால வாரி விட
இதுதான் தற்போது புது வழி
உன்ன ஒதுக்கிரவன வெறுக்காதே
இறைவனிடமே இதை எத்திவை
அவன் ஒதுக்கப்படும் நாள் வரும்
இறைவன் உனை உயர்த்தி வைப்பான்
நல்லது கேட்டது எடுத்து சொல்ல நல்ல
பெரியவர்களின் கடமை இது
கிடைக்கிது போதுமென்று நினைத்து
மற்றவரை குறை சொல்வதை விட்டு விடு
நல்லதை சொல்ல நாவு வராது இந்த
பணம் பாயும் உனக்கு மதி மயங்கும்
நேர் வழியே உனக்கு நிறைவு தரும் வாழ்வு
வல்ல மறையோனின் மகிமையை நீ பெற்றிடு
கவிஞர்.மு.அ.காதர்.