எப்போது வருவாய்
துளிர் விட்டு இலை விட்டு
கிளை பரப்பி
பூ பூத்து
காத்திருக்கிறேன் .
நீ அமர்வாயென!
தினமும் விடிந்தது
கதிரும் வந்தது
பகலும் ஆனது
இரவும் வந்தது
நீ மட்டும் வரவே இல்லை
உனக்காக துளிர்த்த
இலையும் விழுந்தது
மலர்ந்த மலரும் உதிர்ந்தது
இலை விழுந்த தளும்பும்
உன் நினைவும்
என்றும் என்னில்
வடுக்களாய்
நீ மட்டும் வரவே இல்லை
உனக்காக பொந்தொன்றும்
செய்து வைத்தேன்
நீ வைரமாலை போட அல்ல
நீ என்னில் வந்து வசிக்க.
நீ மட்டும் வரவே இல்லை
என் எத்தனை
பூ உதிர்ந்தாலும்
நான் வருத்தப்பட்டதில்லை
உன் ஒரு சிறகு உதிர்த்தாயே
நான் சிதைந்தே போனேன்.
மீண்டும் மழை வந்தது
வசந்தம் வந்தது
துளிர் விட்டு இலை விட்டு
கிளை பரப்பி
பூ பூத்து
காத்திருக்கிறேன் .
நீ வந்து அமர்வாயென!
எப்போது வருவாய் ?