கனவே கலையாதே

சுவாசிக்கும்
காற்றில் காதலைத்
தூவி விட்டாயோ
உன் மூச்சில்
சிறை போக
அடம் பிடிக்கிறது
என்னுயிர்
உனை என்
விழிச் சுட்டியதால்
இடறி விழுந்த
இதயத்தை எடுக்க
உரிமையற்று நிற்கிறேன்
எந்தத் தோல்வியும்
இத்தனை இனித்ததில்லை
உன்னில் தோற்கும்வரை
முடிவே இல்லாத
மீளாப் பாதைகளில்
காதலின் துணைகொண்டு
எனை மீட்டுச் செல்வதாய்
நீள்கின்றன கற்பனைகள்
நீர்த்திடா ஆசைகள்
பலிக்காத பகற்கனவுகள்
நிறமற்ற வானவில்களாய்
வர்ணம் தீட்டும் உன்
வருகைக்காக ஆவலுடன்
தவழ்கின்றன இவளின்
இமை விரிப்பினில்!!