இரட்டை நாக பந்தம்

நாகம் = பாம்பு; பந்தம் = பிணைப்பு.

இரண்டு பாம்புகள் தம்முள் பின்னிப் பிணைந்து தலைகளை உயர்த்தி ஒன்றையொன்று பார்த்து நிற்பது போல ஓவியம் எழுதி, ஒரு பாம்பின் தலையிலிருந்து வால் வரை ஒரு நேரிசை வெண்பாவும், மற்றொரு பாம்பின் தலை முதல் வால் வரை ஓர் இன்னிசை வெண்பாவும் வருமாறு எழுத்துகளை ஒன்றன்கீழ் ஒன்றாக எழுதி அமைப்பது நாக பந்தம். இந்த அமைப்பில் பாம்பு உடல்களின் சந்திப்புகளில் வரும் எழுத்துகள் இரண்டு வெண்பாவுக்கும் பொதுவான எழுத்துகளாக அமைந்திருக்கும்.

அருளின் றிருவுருவே யம்பலத்தா யும்பர்
தெருளின் மருவாரு சிர்ச்சீர் - பொருவிலா
வொன்றே உமையா ளுடனே யுறுதிதரு
குன்றே தெருள வருள். 1 நேரிசை வெண்பா

படத்தில் உள்ள சிர்ச்சீரே என்றிருந்தால் தளை பொருந்தவில்லை, சிர்ச்சீர் என்றிந்தால் தளை தட்டவில்லை.

மருவி னவருளத்தே வாழ்சுடரே நஞ்சு
பெருகொளியான் றேயபெருந் சோதி - திருநிலா
வானஞ் சுருங்க மிகுசுடரே சித்த
மயரு மளவை யொழி. 2 இன்னிசை வெண்பா

இரண்டாவது அடியில் தனிச்சொல் பெற்றிருந்தாலும், மூன்று விகற்ப எதுகை அமைந்திருப்பதால் இப்பாடல் இன்னிசை வெண்பா ஆகிறது.

எழுதியவர் : தண்டியலங்கார மேற்கோள் (5-Jul-14, 6:26 pm)
பார்வை : 369

மேலே