அவரின் அந்த திறமை தானே
நீதிமன்றத்தில் அந்த விவாகரத்து வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. விவாகரத்து கோரிய மனைவி சாட்சி கூண்டில் நின்று நீதிபதியிடம் மன்றாடி கேட்டுக் கொண்டிருந்தாள்.
"என் கணவர் எனப் பெயருள்ள அவரோடு என்னால் இனியும் சேர்ந்து வாழ முடியாது. குறிப்பிட்டு சொல்லும்படியாக அவரிடம் திறமைகள் ஏதும் இ்ல்லை. எனவே எனக்கு விவாகரத்து வழங்கி நீங்கள் உத்தரவிட வேண்டும்"
நீதிபதி அவளிடம் குறுக்கிட்டு பேசினார்.
"உன் பேச்சை என்னால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உன் கணவர் சிறந்த கபடி வீரர். கபடி பாடிக் கொண்டே மின்னல் வேகத்தில் எதிராளியை தொட்டு விட்டு சிட்டாய் பறந்து விடுவார். நீ அதை திறமையாக நினைக்கவில்லையா?"
அந்தப் பெண் நிதானமாக பதில் சொன்னாள்.
"எப்படி முடியும் யுவர் ஆனர்? இந்த விவாகரத்திற்கு காரணமே நீங்கள் கூறியது போல் மின்னல் வேகத்தில் ஒடி வந்து விரல் நுனியால் என்னை தொட்டதும் மறுகணம் சிட்டாய் ஓடி விடும் அவரின் அந்த திறமை தானே!"