பூவுலக சொர்க்கங்கள்
உமிழ்நீர் திரவியம்
உதட்டோரம் கசியும்
பச்சிளம் குழந்தையின்
இதழ்முத்தக்காவியம்
எழுத படாத என் கன்னங்களும்,
நண்பன் கரம் தாங்கி
தேய் நிலவாய்
திகழும் பேறு அற்று
பெரும்பாவம் செய்த என் தோல்பட்டைகளும்,
கல்லறை பயணம் மேற்கொள்ளும்
என் கடைசி வரிகளை
காதோடு கேட்டுகொண்டே
தொடைக்கட்டிலை
தாய் மணத்தால்
தேக்கி வைத்த
என் தேவதையின்
தேன்விழி பார்த்த
முதல் உப்புநீர்துளியில்
மூழ்கி
மோட்சம் பெற மறந்த
என் சிரமும்,
....
வானுலகில் திக்கற்று தேடுகின்றன....
பூவுலகில் நான் தொலைத்த சொர்க்கங்களை...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
