நீங்களும் முயன்று தான் பாருங்களேன்
எங்கெங்கோ அலை பாயுது
மனது
எப்பொழுதும் நிலைக்காமல்
அதில் எண்ணங்கள் ஓடுது
ஓடிடும் எண்ணங்கள் தேடுது
எதையோ, ஆராயுது என்னென்னவோ...!
சில நேரத்தில் நம் எண்ணங்கள்
நம் துணையாகிறது,
பல சமயம், நம் எண்ணங்கள் நம்மிடம்
விரோதம் கொள்கிறது, வேண்டாததை
நினைத்து, நம்மை வதைக்கிறது
என் நேரமும், எதையோ நினைத்து
அதை கலைத்து, இன்னொரு
நினைவினை நிறைத்து
வான ஊர்திகளை மிஞ்சுது
வேகத்தில், எண்ணத்தின் ஓட்டம்
க்ஷண, க்ஷணத்திற்கு மைல்
விரைவினில் பயணிக்க முடிவது
எண்ணங்களால் மட்டுமே
மன எண்ணத்தை ஒரு நொடி நிறுத்தினால்
பாடு பட்டே, வென்றிடலாம் இந்த
பூலோகத்தையே
இது அறிந்தவர், தெளிந்தவர் சொன்னது
நானும் கொஞ்சம் அனுபவித்து அறிந்தது
என்னை நான் வெல்ல, என் எண்ணத்தை
நான் வென்றிட வேண்டும்,
முடியவில்லை என்னால் அது...!
முயற்சிகள் வீணானது....!
நீங்களும் முயன்று தான் பாருங்களேன்