எறும்புக்கும் துணிச்சலுண்டு

Ant :
ஊர்ந்து ஊர்ந்து செல்கிறேன்... உன்
உடம்பில் ஏறி கிச்சிக்கிச்சி மூட்டுகிறேன்..!
சின்ன சின்ன பொந்தில் நுழைந்துவிடுவேன்... இந்த
சிற்றெறும்பு சர்க்கரை கண்டால் என்
கூட்டத்தையே அழைத்துவருவேன்..!
வரிசையாக செல்வது என் இயல்பு... என்னை
வழிமறைத்தால் கடிப்பேன் அதற்கு
நானில்லை பொறுப்பு..!
இனிப்பை நீ சாப்பிட்டால் உனக்கு இருமல் வரும்...
இந்த எறும்பு இனிப்பை சாப்பிட்டால் உடல்
ஆரோக்கியம் பெரும்..!