மீண்டும் வானம்பாடி

குண்டுகள் குளிக்கும் கொலை கள பூமி
ரத்தம் கசியும் மரண சவக்கிடங்கு ...

ஈராக்கில் முளை விடுகிறது
இன்னொரு யுத்தம் ..சத்தியம் வெல்லுமா ..???

செவிளியர்களாய் என் சகோதரிகள் சேவை புரிய சென்றவர்கள் ..
கடத்தப்பட்டு கைதிகளாய் ..உயிருக்கு உத்திரவாதமில்லை ...

கடனை அடைக்க கடல் கடந்து போய்
இப்போது கைதியாய் அடைபட்டு கிடக்குது தேசிய கீதம் ..

பாலையில்.. பருவம் தொலைத்த என் வானம்பாடிகள்
பட்டினி கீதம் இசைக்கிறது பயத்தில் ..

சேவை செய்வதென்ன தெய்வக்குற்றமா..?
தேசம் தாண்டிப்போனவர்களை விலங்கிடுவது விதியா..?

திரும்பி வந்துவிடுவாள் என் மகள் ..
தெருவை நோக்கி தேதி பார்க்கும் எத்தனை அம்மாக்கள்..?

அடடா ..இனிப்பு செய்து வந்தது நேற்று ..
மீண்டும் வானம்பாடிகள் மீண்டு வந்துவிட்டனர் என்று ..!!

எழுதியவர் : அபிரேகா (6-Jul-14, 3:36 pm)
Tanglish : meendum vaanampaadi
பார்வை : 513

மேலே