மீண்டும் வானம்பாடி

அதிகாலை விழிக்கின்றோம்; கதிரவனை மறக்கின்றோம்
அவசரமாய் படிக்கின்றோம், வைட்டமின்-டி அருமைகளை...

அம்மாவையும் அப்பாவையும், மம்மிடாடியாக்கி விட்டோம்..
தெரியாமல் தமிழ்பேசி, அபராதமும் கட்டிவிட்டோம்...

மூக்கொழுக்கிப் படைத்த, களிமண் பொம்மைகளை,
மூளையில்லாமல், வீடியோ கேம்ஸ்க்கு விற்றுவிட்டோம்..

செல்லமாய் கதைசொல்லும் பாட்டியையும் தாத்தாவையும்,
செல்போனின் மோகத்தால் உள்ளம்விட்டு ஒதுக்கிவிட்டோம்...

செய்வதற்குச் செய்யாமல் சொல்வதற்குச் செய்கின்றோம்...
ஆங்கிலத்தை விரும்பியேற்று, தாய்க்கவிதைகளை கொன்றுவிட்டோம்...

இயற்கையையும் செயற்கையாகவே, ரசித்தும் பழகிவிட்டோம்...
துரிதமான உணவுகளை, புசித்தும் பழகிவிட்டோம்...

உணர்வுகளை கடத்துகின்ற நரம்புகளோ இன்று,
மதிப்பெண்கள் தேவையினால், சிலபஸ்கள் கடத்துகின்றன...

புதியநன்மைகளை ஏற்று, பழையதீமைகளை விரட்டி,
மீண்டு வானம்பாடிகளாவோம், மீண்டும் வானம்பாடிகளாவோம்.....

எழுதியவர் : கார்த்திக் (6-Jul-14, 3:58 pm)
பார்வை : 67

மேலே