இங்க் பேனாவை பராமரிப்பது எப்படி

சில விசயங்களை நாம் சாதாரணமாகத்தான் பார்க்கிறோம்;எடுத்துக்கொள்கிறோம்...
ஒரு அலட்சியம்தான்.. அட..இதென்ன பெரிய வேலை..
இதைப்போய்...பெரிசா பேசிட்டு?

இங்க் பேனா விசயத்தையும், இப்படித்தான் நான் நினைத்துக்கொண்டேன்...இன்றைக்கு சென்னை பாரீஸ் கார்னரில் ஹைகோர்ட்டுக்கு எதிரே உள்ள , 85 ஆண்டுகள் பழமையான, "ஜெம் பேனா கடை" முதிர்ந்த பெரியவர் குப்புசாமியை சந்திக்கும் வரை..
பட்டியலிடுகிறேன் அவர் சொன்ன நல்ல விசயங்களை..

★பால் பாய்ண்ட் பேனாவை விடவும் இங்க் பேனாதான் கையெழுத்து அழகாய் வர உதவும்.
★பேனா நிப்பை கையால் தொடுவது கூடாது.
★நிப் உடைந்து போனாலோ, தேய்ந்து போனாலோ வேறு புதிய நிப்பை மாற்றுவது மட்டுமே போதாது. அந்த நிப்பையும்,அடிக்கட்டையையும் சரியான முறையிலே பொருத்துவது மிக அவசியம். இல்லையென்றால் உள்ளே அடைத்துக்கொண்டு இங்க் சரியாக வெளியேறாது. இதனால் சீராக எழுதுவது தடைப்படும். சாதாரண நிப்தானே...என்று நினைக்காமல் ,முடிந்தவரை கடைக்காரரிடமிடமே கொடுத்து பிட்டிங் செய்வது நல்லது.
★நல்ல தரமான பேனாவின் நிப்புகள் ஐந்து வருடத்திறகெல்லாம்கூட சர்வ சாதாரணமாக வரும்.
★இங்க்கில் நீல கலர் இங்கைத்தவிர மற்றவையெல்லாம் அதாவது பச்சை,சிகப்பு ,கருப்பு எல்லாம் அதில் கலந்துள்ள கெமிக்கல்களினால் , மூன்று ,நான்கு நாட்கள் பேனாவை உபயோகப்படுத்தாமல் விட்டுவிட்டால் , எழுதவே வராது. இது அந்த கெமிக்கல்கள் படியும் தன்மை கொண்டதால் ஏற்படுகிறது. எனவே அதிகமாக எழுதுபவர்கள்,எழுத்தாளர்கள்,ஆசிரியர்கள் நீல கலர் இங்க்கையே உபயோகப்படுத்துவது நல்லது.
★இங்க் பேனாவை மாதத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்வது சிறப்பு. முக்கியமாக நீலம் தவிர மற்ற கலர் இங்க் உபயோகப்படுத்துவர்கள் இதை அவசியம் பின்பற்ற வேண்டும்.
★சுத்தம் செய்ய குளிர்ந்த பச்சை தண்ணீரே சரியானது. போதுமானது. சுடு தண்ணீர் தேவையில்லை.
★விலை குறைவான பேனாக்களை உபயோகப்படுத்தினால் " லீக்" காகி ,கைகளை கறைப்படுத்தும். நல்ல தரமான பேனாக்களையே உபயோகப்படுத்தவேண்டும்.
★எவ்வளவு நேரம் எழுதுகிறோம் என்பதற்கேற்ப ,பேனாவின் சைஸை மாற்றிக்கொள்வது அவசியம். மெலிதான பேனாக்களை நீண்ட நேரம் உபயோகிப்பதால் கை வலிக்கும். அவர்கள் தடிமனான பேனாவை உபயோகிப்பதுதான் சரி.

எழுத்து ஒரு கலை என்றால் அந்த கலையை அழகாக பயில, அதற்கான கருவியான எழுதுகோலின் மீதும் அக்கறை எடுத்தால்தான் சாத்தியம்.
.....அனுபவம் கற்றுத்தரும் பாடத்தை இதோ இந்த சின்ன விசயம்கூட நமக்கு தெளிவாக உணர்த்துகிறது பாருங்களேன்....

எழுதியவர் : முருகானந்தன் (8-Jul-14, 12:29 pm)
சேர்த்தது : MURUGANANDAN
பார்வை : 217

மேலே