அழகு அம்சங்களின் அருவி அவள்
பொதுவாய்
பெண்ணில் அதி சிறந்த
அம்சம் யாதென எனை கேட்டால்
கணநேரமும் யோசிக்காது மறுகணமே
அழுத்தமாய் பெண்மை என்பேன்
அதுவே
உன்னில் அதி சிறந்த
அம்சம் யாதென எனை கேட்டால்
குறைந்தது சிலமணிநேரம் வேண்டுமென்பதை
அழுத்தமாய் உண்மை என்பேன்
இருக்கும் அத்தனை பேரம்சங்களில்
விதிவிலக்காய்,சின்னஞ்சிறிதாய்-இருந்தும்
சிறுநொடி வீச்சிலேயே, சிக்குண்டவரை
சிறைபிடித்திடும் சிறப்பம்சம் வாய்ந்த
நின் திருதிரு துருதுரு குறுகுறு
இரு விழிகளை அடிக்கோடிட்டிடவா ??
அல்லது ,
அழகம்சங்களின் அளவீட்டினில்
அகரமுதலியாய்,ஆரம்பமாய்
திகழ்வதோடன்றி, முகத்தின் அழகினில்
முதன்மையாய் விளங்கிடும்
அம்சங்களின் அம்சத்தினை
மிக அழகாய் தூக்கிப்பிடித்திடும்
நின் எழில் மூக்கினை அடிக்கோடிட்டிடவா??
அல்லது,
நின் பிறைமுகமெனக்கு
அறிமுகமானதிலிருந்து இதோ இன்றுவரை
பெரும்பான்மை பொழுதுகளில்
மறைமுகமாய் இருந்துவந்த,வரும்
பெண்மையின் சிறப்பம்சங்களில்
சற்றே, பேர் அம்சங்களாய் விளங்கிடும்
ஈர் அம்சங்களினை அடிக்கோடிட்டிடவா ??
இப்படி,அழகம்சங்களினை
அம்சமாய் அமையப்பட்ட
அம்சவள்ளி உன் அழகம்சங்களை
வரிசைபடுத்திட விழைந்திட்டால்
இதுகாறும் எனை வெறும் இம்சித்து
வந்த நின் அம்சங்களது
இனி துவம்சம் செய்திடுமோ ?