மனிதனின் பண வேட்கையில்
மனிதனின் பண வேட்கையில்
கல் அறைகள் கல்லறைகள் ஆயின ............
இடிதாங்கும் கட்டிடங்கள்
ஏனோ இடிந்து மக்கள் இன்உயிர் வாங்கின .....
குளிர் ஊட்டப்பட்ட அறைகள் கொண்ட இதமான தென்றல்
காற்று கமழும் கல் அறைகளில் ஏனோ
ஜீசஸ்! ஈஸ்வரா! அல்லா! முருகா!
என்று கூறியபடி சமாதியாயின கதறல்கள்..............
ஐயஹோ .................
இடிபாடுகளில் சிக்கியவர்களின் கூக்குரல்
வரவழைக்கும் வருத்தத்தை விட
ஜனநாயகம் பணநாயகம் ஆனதே வருத்தம் ........
என்று தீரும் மக்கள் இன்னுயிர்
குடித்த கபோதிகளின் பண வேட்கை ...