இனிமை தரும் இல்லறம்
இனிய இல்லறம் இளங்காலைப் பொழுது
நனிசுவை ததும்பும் தீஞ்சுவை அமுது
பனிமலர் மூடிய குளிர்தரு சோலை
தனிமை போக்கும் எழில்மிகு வேளை
இருமனம் இணையும் திருமண உறவு
நறுமணம் கமழும் வசந்தத்தின் வரவு
சுற்றமும் நட்பும் நவிலும் வாழ்த்து
உற்றார் பெற்றாருக்கு உவகை ஊற்று
அன்பும் அருளும் உள்ளம் நிறைந்து
பண்பும் பயனும் இலங்கிடும் வாழ்வில்
இன்பம் சூழ்ந்து இதயங் கனிந்து
மண்ணில் சிறப்புற்று வாழ்கவே இனிது!