பத்து 9+1
பத்து வருடங்களுக்கு முன்பு.....
பத்மநாபன் இவன் அவர் வீட்டில் பத்தாவது குழந்தை
இவனுக்கு முன்னாடி பிறந்த ஒன்பது குழந்தைகளும் இறந்து விட்டன.இவன் மட்டுமே நிலைத்தான் அதனால் பத்து பத்து என்று அனைவரும் செல்லமாக அழைத்தனர் இவன் பிறந்த கொஞ்ச நாட்களிலேயே அவன் அம்மாவும் இறந்து விட்டார்கள்
இந்த உலகத்திலேயே இவனக்கு பிடிக்காத முதல் விசயம் இவன் பெயர் தான்
நீங்கள் நினைக்கும் மாதிரி பெயர் ரொம்ப பழைய அல்லது மாடலிங் கா இல்ல அப்படி என்பது எல்லாம் காரணம் அல்ல
இது மேட்டரே வேற...
அன்று அவனுக்கு பத்தாவது ரிசல்ட்...
ராம் ஆதாவது பத்து.அவனுக்காக அவனே வைத்து கொண்ட பெயர்
ரிசல்ட் என்றாலே பதட்டம் நிறைந்த சூழ்நிலை தான்.அதுவும் நம்ப பத்து
சாரி ராம் ரொம்ப பதட்டம் அடைய கூடிய சுபாவம் உடையவர்
கிருஷ்ணா அவர் வகுப்பு காரன் கிருஷ்ணாவுக்கும் ராமுக்கும் தான் போட்டி ஏன் இருவரும் பகையாளி கூட சொல்ல லாம் இந்த சூழ்நிலையில் இவர்கள் பெறும் மதிப்பெண்ணே இவர்களில் யார் வெற்றியாளன் என்பதை தீர்மானம் செய்ய வல்லது அதனால் மிகவும் பதட்டம் ...
பொதுவாகவே பதட்டத்தில் இருக்கும் பலரும் எதையாவது ஒன்றை செய்வார்கள் நகம் கடிப்பது்,விரல்களில் நெட்டு முறிப்பது என்று. அதேபோல் ராமுக்கும் ஒரு பழக்கம் பேனாவை வைத்து யதையாவது கிறுக்குவான்
இப்போதும் பேனாவை வைத்துக்கொண்டு பேப்பரில் எதையோ எழதிக்கொண்டு இருக்கிறான்
வாருங்கள் போய் பார்க்காலம் என்ன எழுதுகிறான் என்று வாங்க!!!
ஒன்று ,இரண்டு என்று வரிசையாக எழுதி கொண்டு வந்தான் ஆறு,ஏழு வரைக்கும் வேகமாக எழுதி வந்த ராம் எட்டு ,ஒன்பது என எழுதி சற்று நிறுத்தி பத்து என்று எழுதாமல் 9+1 என்று
எழுதினான்....
என்ன? பாக்கறிங்க நா தான் முன்னாடியே சொன்ன இல்ல இது வேற மேட்டரு னு !!!!
-தொடரும்