காதல் ஜெயித்தது 7

ஊரை கூட்டி கேவலப்படுத்தி விட்டதாய் நினைப்பாரோ? அன்பு என்னை மன்னித்து விடுங்கள் அன்பு. உங்களை நேரில் பார்க்க வேண்டும். உங்கள் மனம் என்ன பாடுபடும். உண்மையை சொல்ல வேண்டும். எப்ப உங்களை பார்ப்பேன். பார்ப்பேனா? இல்லை பார்க்காமலே போய்விடுவேனா ? அழுதாள். கண்ணீர் வற்றும் வரை அழுதாள்.
நடை பிணம் போல் ஆனான் அன்பு.
ஆறு மாதங்களுக்கு பின் சத்யாவை ஊருக்கு கூட்டி வந்தார்கள். வீட்டில் யாரூடனும் பேச பிடிக்காமல் தன் அறைக்குள் அடைந்து கிடந்தாள். நூலாய் இளைத்து கருத்து போயிருந்தாள். அவள் தாய்க்கே அவளை பார்க்க கஷ்டமாக இருந்தது.
அன்பை பார்க்கணும், மன்னிப்பு கேக்கணும். அன்பு, அன்பு.அன்பு. உங்களை பார்க்கணும். நீங்கள் எங்கே இருப்பீர்கள். அவளுக்கு அவன் பேர் தவிர எதுவுமே நினைவில்லை.
தன் அறையை விட்டு வெளியே வந்தாள். கால் போன போக்கில் நடந்தாள். அவள் உள்ளம் மட்டும் அன்பு, அன்பு என்றே உருகியது.
எதையும் நினைக்காமல். நடந்தவளின் கால்கள் நின்ற இடம் அன்பின் வீடு. யாரோ வரும் சத்தம் கேட்டு வெளியே வந்த அன்பு தன் கண்ணையே நம்ப முடியாமல் திகைத்து நின்றான்.
பிரமையோ என்று கிள்ளி பார்த்தான். உண்மைதான் சத்யா நிற்பது உண்மைதான். அனால் இது என்ன கோலம். இப்படி துரும்பாய் இளைத்து விட்டாளே. கண்ணெல்லாம் உள்ளே போய், ஐயோ
இதென்ன கோலம்.வெதும்பினான்.
பார்த்த கண்கள் பார்த்தபடி இருக்க , கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது சத்யா கண்ணில்.
ஏண்டி வீட்டை விட்டு ஓடி வந்துட்டாயா? எங்க மானத்த வாங்கவே வந்து பிறந்தயா?
குரல் கேட்டு அதிர்ச்சியாய் திரும்பி பார்த்தாள் சத்யா. அங்கே அவளது பாட்டி நின்று கத்தி கொண்டிருந்தாள்.
இல்ல பாட்டி , அந்த எண்ணத்துல நான் வரல பாட்டி, எனக்கு அன்பை பார்க்கணும்னு தோனுச்சு.
அதான் வந்தேன்.
நிறுத்துடி , இனி வீட்டு பக்கம் வந்துறாத. எல்லாம் முடிஞ்சு போச்சு. நாங்க உன்னை தல முளுகிடறோம். இனி அம்மா , அப்பா சொந்தம், பந்தம்னு வீட்டு பக்கம் வந்துறாத. நீ செத்துட்டேன்னு நினச்சுகறோம் என்று கூறிவிட்டு திரும்பி கூட பார்க்காமல் சென்று விட்டாள்.
என்ன செய்வதென்று புரியாமல் நின்றான் அன்பு. என்ன இது சூழ்நிலை. எப்படி கையாள்வது குழம்பினான்.

அன்பு என் கழுத்துல தாலிய கட்டுங்க. சத்யா என்ன சொல்ற. உங்க அப்பா , அம்மா சம்மதம் இல்லாமல் தாலி கட்டுறதா. என்ன உளர்ற . கோபத்துல முடிவு எடுக்காத சத்யா.

ஆமா அன்பு எந்த தப்பும் நம்மோடது இல்லை. இப்படிதான் கல்யாணம் நடக்கனும்னு இருந்திருக்கு . நா சொல்றேன். கட்டுங்க என்றாள்.

வாங்கி வைத்திருந்த தாலியை எடுத்து அவள் கழுத்தில் கட்டினான். வாசலில் அன்பின் தாய் நின்றிருக்க சாஸ்டாங்கமாய் அவள் காலில் விழுந்தார்கள்.

எந்திருங்க என் கண்ணுங்களா. நீங்க ரெண்டு பேரும் இனிமேலாவது எந்த கஷ்டமும் இல்லாமல் நிம்மதியா இருக்கணும் என்று வாழ்த்தினாள். அந்த ஏழை தாய்.
அந்த ஏழை தாயின் வீடு அன்பு, சத்யாவின் சந்தோசத்தால் நிறைந்தது. அவர்கள் வாழ்க்கை வறுமையிலும் இன்பாமாய் நகர்ந்தது. அன்பு கொண்டு வரும் குறைந்த சம்பளத்திலும் நிறைவாய் வாழ்ந்தார்கள்.
சத்யா பக்கத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு ட்யுசன் எடுத்தாள். தனக்கு தெரிந்த தையல் கலை மூலம் பக்கத்திலிருக்கும் பெண்களுக்கு துணிகள் தைத்து கொடுத்து சிறிது வருமானம் ஈட்டினாள்.
இருப்பதை மூவரும் பகிர்ந்துண்டு இன்பமாய் வாழ்ந்தார்கள். மாமியார் அவளுக்கு தாய் போலானாள். அந்த இன்பத்தை பகிர்ந்து கொள்ள இன்னொரு ஜீவன் வர இருந்தது. அதை அறிந்த அன்பு ஆனந்தத்தில் மிதந்தான். தான் அப்பா ஆகபோவதை அறிந்து சந்தோஷத்தில் குதித்தான்.
மாமியார் அவளை கையில் வைத்து தாங்கினாள். அன்பு அந்த வறுமையிலும் அவளுக்காக வேண்டியதை வாங்கி கொடுத்தான்.
மகள் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அவளை பார்க்க வந்தாள் சத்யாவின் தாய். சத்யா எப்படிமா இருக்க என்று கேட்டாள் தாய் .
உனக்கு என்ன வேணும்னு கேளுமா. ஆசைப்பட்டத கேளுமா. நான் செய்றேன் என்றாள்.
தயவு செஞ்சு வெளிய போங்க. எனக்கு செய்ய, என்ன பாத்துக்க என் புருஷன் இருக்கார். நீங்க எனக்காக எதுவும் செய்ய வேண்டாம். என்ன தொந்தரவு செய்யாம போங்க , என் ஆசை அதுதான் என்றாள் சத்யா.
சத்யா ஏன் இப்படி பேசற. வீடு தேடி உன்னை பாக்க வந்தவங்க கிட்ட இப்படியா பேசுவ.என்றான் அன்பு.
அன்பு உங்களுக்கு பெரிய மனசு. உங்க மனசு இவங்களுக்கு புரியாது. அவங்க உறவு நமக்கு தேவை இல்லை என்ற உறுதியாக கூறி விட்டாள் சத்யா.
சத்யாவின் தாய் அழுதபடி சென்றுவிட்டாள்.
நாட்கள் சென்றது. பிரசவ வலியில் துடித்தாள் சத்யா. 108க்கு போன் பண்ணி அரசு மருத்தவமனையில் பிரசவத்திற்கு சேர்த்தார்கள். சத்யா அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தாள்.
மூன்று நாள் கழித்து வீடு வந்தார்கள். அன்பும் அவள் தாயும் சத்யாவையும், குழந்தையும் கண்ணுக்குள் வைத்து பார்த்தார்கள்.
குழந்தை தளர் நடை நடந்தாள், மழலை மொழி பேசி மூன்று பேரையும் தன் பொக்கை வாய் சிரிப்பால் மயக்கினாள்.
மூன்று வருடம் ஓடியது. சத்யா கணவன் வருமானத்தில் கட்டுசெட்டாய் குடும்பம் நடத்தி கொஞ்சம் பணம் சேமித்து வைத்திருந்தாள்.
சத்யா நீ உன் படிப்பை தொடர்ந்தாள் என்ன? என்றான் அன்பு.
இல்ல அன்பு பாப்பா கொஞ்சம் வளர்ந்துட்டா இல்லையா? அத்த கிட்ட விட்டுட்டு வேலைக்கு போலாம்னு இருக்கேன் என்றாள்.
இல்ல சத்யா நீ ஆசை பட்ட மாதிரி படி. படிச்சுட்டு அரசாங்க வேலைக்கு போய் உன்னால முடிஞ்ச உதவிகளை மத்தவங்களுக்கு செய்யணும். இதுதான் என் ஆசை. நீ நிறைவேத்துவையா சத்யா என்றான் அன்பு.
அவன் பாசத்தில் அவள் கரைந்து போனாள். அந்த ஆண்டே படிப்பதற்கு சேர்ந்தாள். கூடவே போட்டி தேர்வுகளுக்கும் தன்னை தயார் படுத்திகொண்டிருந்தாள்.
டிக்ரீயும் முடித்தாள். டிஎன்பிஎஸ்சி நடத்திய கிராம நிர்வாக அலுவலர் தேர்வு எழுதினாள் . சத்யா தேர்வாகி இருந்தாள் கிராம நிர்வாக அலுவலர் வேலைக்கு.
அன்பு சந்தோசப்பட்டான் . சத்யா தன் கணவனுக்கு கோடி நன்றி சொல்ல கடமைபட்டிருந்தாள். தன் ஆசையை நிறைவேற்றிய தன் காதல் கணவனை கட்டி முத்தமிட நினைத்தாள். கண்களாலேயே நன்றி சொன்னாள்.
ஒன்னுமில்லாதவனை கட்டிகிட்டையே உனக்கு அவன் என்ன செய்வான் என்று கிண்டல் செய்த அவள் உறவுகள் முன் அந்த ஊரிலேயே பணியில் அமர்ந்தாள்.
அவர்களின் உண்மை காதல் ஜெயித்தது. சந்தோசம் தென்றலாய் தவழ்ந்தது.
(முற்றும்)

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (9-Jul-14, 1:45 pm)
பார்வை : 118

மேலே