காதல் பார்வை
உந்தன் கன்னங்களில் வெள்ளி கிண்ணம்
தொட்டு பார்க்கவோ மெல்ல கொஞ்சம்
இரு காது மடல்களில் தங்க சின்னம்
லோலாக்கு போலதான் எந்தன் நெஞ்சும்
கழுத்து வியர்வையில் வைரம் மின்னும்
இதமாய் துடைக்க பாவிமனசு கெஞ்சும்
படபடக்கும் இமைகளில் மின்னல் கீற்றும்
எந்தன் மனதின் உள்ளே வீணை மீட்டும்
இதழ்கள் ஓரம் புன்முறுவல் பூக்கும்
என் உயிரை அலசி பிழிந்து போடும்
கூந்தல் ஓரம் களையும் சில முடிகள்
காற்றில் பறந்து என் ஆண்மை தோற்கும்