தேநீர் விடுதி

தேநீர் - மட்டும்
அருந்தியது இல்லை

செய்தித்தாள் - மட்டும்
வாசித்தது இல்லை

அரசியல் - மட்டும்
பேசியது இல்லை

புகையிலை - மட்டும்
புகைத்தது இல்லை

எல்லாம் தெரிந்திருந்தும்
எதையும் முழுமையாக
செய்ததும் இல்லை

எழுதியவர் : உடுமலை கே.வி. சம்பத்குமார் (9-Jul-14, 3:43 pm)
சேர்த்தது : க.சம்பத்குமார்
Tanglish : theneer viduthai
பார்வை : 1288

மேலே