சிறகு இழந்த வண்ணத்துப் பூச்சி

அழகான வண்ணத்துப் பூச்சி
சிறகுகள் காற்றில் பறக்க
இருசக்கர வாகனத்தை
இயக்கிக் கொண்டிருந்தது!!!

பார்த்ததும் பரவசமானேன்
பயம் வந்து என்னை பற்றிக் கோள்ள
ஓடி சென்று அதனிடம்
சிறகுகளினால் உனக்கு ஆபத்து என்றேன்

பதற்றத்துடன் சுருட்டி
பக்கவாட்டில் இறுக்கிக் கொண்டது

சினேகமுடன் சிரித்தது
அசட்டுச் செய்கையுடன்
அவ்விடத்தை விட்டு அகன்று சென்றது

புதிய அனுபவத்தால்
புவி ஈர்ப்பு விசை மறந்திருந்த வேலையில்
சிறகிழந்த பல வண்ணத்துப் பூச்சிகள் கண்டேன்

வெக்கப்பட்டு
பின்னர்
வேதனைப்பட்டு
அவ்விடத்திலிருந்து விலகி வந்து விட்டேன்.

எழுதியவர் : உடுமலை கே.வி. சம்பத்குமார் (9-Jul-14, 3:50 pm)
சேர்த்தது : க.சம்பத்குமார்
பார்வை : 597

மேலே