திசை மாறும் சொந்தங்கள்
அண்ணா என்று என்றும்
அழைத்ததில்லை,
அம்மையும் அப்பனும் நீயே
என்று எண்ணியதால்;
கூடி களிப் பதற்கோ
சண்டை சமாதானங்களுக்கோ
என்றும் குறைவில்லை நான்
கூடப் பிறந்தவள் என்றதால்;
பாசப் பதி வுகளை
பட்டியளிட்டதில்லை,
வார்த்தைகள் உணர்த்தாது
வாழ்க்கையை என்றதனால்;
என் உயிராகி ஒருவர்
எனில் கலந்த போதும்
என் மன சிம்மாசனத்தில்
நீ அப்படியே;
என் தாயாக வேண்டியவள்
உன் தாரம்மட்டுமே ஆனாலும்
உன் மாற்றம் யாருக்காக?
பத்து முப்பதை வென்றதோ?
தமையன் உறவின்றி
தங்கைகென்ன பெருமை?
மாமனை மதிக்காத
உனக்கென்ன மரியாதை?
யார் சொல்லிப் பிறந்தோம்
ஓர் வயிற்றில்?
இன்று நீ சொல்லி பிரிய,
காலம் பதில் சொல்லும்