அம்மா

நிலவினைக்காட்டி
நித்தம் சோறூட்டி -தாய்ப்
பாலூட்டி கூடவே
பைந்தமிழையும் எனக்கூட்டி
கண்விழித்து என்னை காத்து
கல்விசாலைக்கு என்னை அனுப்பி
கருணையோடு வளர்த்த தாயே..உன்
கண்கள் மூடிட நான்
கண்டதில்லை ...
கண்டேன் அம்மா ஒரு நாள்
காலனின் அழைப்பினில் நீ
கண்மூடிக்கிடந்த அந்த நாளை..
நெருப்பில் விழுந்து துடிக்கும் புழுவாய்
நீரின்றி தவிக்கும் மீனாய்
துயர் என்ற மேகம் என்னை சூழ்ந்திட
துடிதுடித்துப்போனேன் அம்மா..
கருவினில் சுமந்து என்னை
காத்திட்ட கருணை விளக்கே..இன்றும் உன்
ஒளியில் தான் என் பயணம்
ஒவ்வொரு நாளும் தொடர்கிறது...
வானத்து வெண்ணிலவாய் என்
வாழ்க்கைப் பயணத்திற்கு
வழிக்காட்டிட வேண்டுகிறேன் தாயே...

எழுதியவர் : (9-Jul-14, 9:55 pm)
Tanglish : amma
பார்வை : 85

மேலே