அஃனி நிலவு
பூமியில்
புதிதாய் பிறந்தவளே
உலகத்தை
உறவாக்கிக்கொள்
உறவுகளை
உனதாக்கிக்கொள்...
முதலில்
சற்று சிரி
தெரியவில்லையா?
அழுவுவது மட்டும்
ஆரம்ப பாடமோ -இல்லை
அன்னை சொல்லிக் கொடுத்ததா?
நீ
உன் வயிற்றுப் பசியை
அழுது அழுதே நிரப்பிவிட்டாய்
வாழ்கையின்
பிடியில் இன்னும்
எத்தனையோ பெண்கள்
அழுதுகொண்டுதானிருக்கின்றனர்
பள்ளி நாட்களில்
பக்கத்துச் சிறுவன்
கிள்ளிவிட்டானென்று
அன்னையிடம் வந்து அழுகின்றாய்
அங்கேயே
எதிர்திருந்தால்
ஆரம்பம் அதுதான்
உன்
இல் வாழ்கையை
ஆரம்பிக்க வரதட்சணை
கேட்பவரிடம்
இனி நீயும்
வாழ்கை துணையாக - வர
தட்சணைக்கேள்
உன்
போராட்டங்கள்
புதிய சரித்திரமாகட்டும்
பொறுத்திருந்த காலங்களை
ஆழத்தில் புதைத்துவிட்டு
நீ
நீர்க்குமிழியாய்
வெளியேறி
நெருப்புக் கதிர்களாய்
வெடித்துச் சிதறு
புரிந்து கொள்ளட்டும்
இவள் அடிமைப் பெண்ணல்ல
அஃனி நிலவு என்பதை.