முந்தைய செடி

எத்தனை
பூக்களை பிரசவித்தோம்
என எப்போதும் செடிகள்
எண்ணுவதில்லை

பூக்களை
பறிக்கையில் அவைகளுக்கு
வலிக்கிறதா என்பதை நாம்
உணர்வதும் இல்லை

தினமும்
பூத்துக் கொண்டே
தினமும்
பறித்துக் கொண்டே

ஒரு நாள்
வேர்கள் செத்துப் போய்
இலைகள் காய்ந்து சருகுகளாய்
போகும் போது

பிடுங்கி
எரிந்து விட்டு
புதிய செடி நட்டு வைப்போம்.

முந்தைய செடியாக நான்!

எழுதியவர் : OMPJ ஜாகிர் உசேன் (10-Jul-14, 9:40 pm)
Tanglish : MUNTHAIYA sedi
பார்வை : 83

மேலே