ஜாகிர் உசேன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஜாகிர் உசேன் |
இடம் | : திருநெல்வேலி |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 81 |
புள்ளி | : 23 |
எத்தனை முறை
சண்டையிட்டோம் எனத்தெரியாது
ஆனால் அத்தனை முறையும்
சமாதானம் ஆகியிருக்கிறோம்
இப்போதோ
சமாதானம் செய்து கொள்ளும்
வாய்ப்பாக
எந்தச் சண்டையும் இல்லை
அதனால்தான்
மறந்து விட்டாய் போல்
என்னை...!!
இதை காரணம்
காட்டியாவது
என்னிடம்
ஒரு சண்டை போடு...!!
என் செல்ல திம்ஸ்.
கனவுகளை பதிவு செய்யும்
கருவி வேண்டும்
என் கனவுகளை விடிந்தபின்
யாருக்கும் விளக்க முடியவில்லை
எனக்கே மீண்டும்
நினைவுபடுத்த இயலவில்லை
பீஸா, பர்கர் திண்ணதவிட...
வெங்காயம், மோர்மிளகா வச்சி
பழைய சோறு திண்ணத
என்னைக்கு பெருமையா சொல்லுவானோ
அன்னைக்குதான் இந்தியா வல்லரசு ஆகும்.
சாலை விபத்து
சக மனிதனுக்கு
நின்று கவனிக்க நேரமில்லை...
வினாடி முட்கள்
விரட்டுகின்றது இவனை
இருந்தாலும் போகிற போக்கில்
108 க்கு தகவல் சொல்லிவிடலாம் என்று..
அழைபேசி எடுத்து
சொடுக்கி இடது தேளுக்கும்
காதுக்கும் இடையில் சொருகி...
அதை மட்டுமா
சொருகினாய்
எதிரே வந்த லாரியில்
உன் வண்டியையும் சேர்த்தல்லவா
நீ அழைத்த
அவசர ஊர்தி உன்னை சுமந்தே
விரைந்தது
வினாடிகள்
நிதானித்திருந்தால்
நீ பிழைத்திருப்பாயடா...
வண்டி ஓட்டும் போது
போன் வந்தா வண்டிய நிறுத்திட்டு
பேசுங்க அழைப்பவருக்கும் அவசரம் இருக்கலாம்.
இருளில் சிறுமழலை
முனகலோசை...
இருட்டையும் கிழித்து
இருசெவியில்...
இந்த சிறுமழை
ஈரத்தில் சில்வண்டாய்...
இருக்குமென
இதயம் சொன்னாலும்...
இல்லையில்லை
மழலையின் ஓசைதான்...
எங்கே... என்று
சுற்றும் பார்த்தேன்
சுற்றி பார்த்தேன்
சுதாரித்து நின்றேன்...
என்னவென்று
நான்சொல்ல...?
உதிரத்தில் நனைந்து
ஓர் சிறுமழலை...
உயிரற்ற பெண்ணின்
உடலோடங்கே....
உறவாடி கிடக்கிறது
உதறிக்கொண்டே...
பிறந்த தொப்புள் கொடி உடல்சுற்றி
பிறப்பெடுத்த ஒரு மழலை பிஞ்சு...
இதயம் கனமெடுத்து இருக்கும்
இடம்ஓடி பொதுபேசியில் காசிட்டு
இந்த பொல்லாத செய்தி சொன்னேன்...
இலவசமாய் அவசரஊர்தி
உனக்கு
அசைவம் பிடிக்காதென்பதில்
துளிச் சந்தேகமில்லை எனக்கு...!
ஆனால்,
இதழோடு இதழ் சுவைத்து
கொடுக்கப்படும் அதிகாலை முத்தங்கள்
சைவமா? அசைவமா? என்பதில்
பெரும் சந்தேகம் உண்டு...!!
எப்போதுமே
அம்மாக்களின் அவசியத்தேவை
பிள்ளைகளின் நலனாக மட்டுமே உள்ளது
சமாதானப் புறாக்களையும்
சமைத்து ருசி பார்க்கும் உலகில்தான்
எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழ்கிறோம்.