என் ப்ரியமானவளுக்கு
எத்தனை முறை
சண்டையிட்டோம் எனத்தெரியாது
ஆனால் அத்தனை முறையும்
சமாதானம் ஆகியிருக்கிறோம்
இப்போதோ
சமாதானம் செய்து கொள்ளும்
வாய்ப்பாக
எந்தச் சண்டையும் இல்லை
அதனால்தான்
மறந்து விட்டாய் போல்
என்னை...!!
இதை காரணம்
காட்டியாவது
என்னிடம்
ஒரு சண்டை போடு...!!
என் செல்ல திம்ஸ்.