கத்தாழை காதல் செடி

கத்தாழை காதல் செடியை எங்கெல்லாமோ வளர்கிறாய்,
என் மனதை நீயோ அதன் முட்களை வைத்து பிளக்கிறாய்.
தாய் தந்தையை கொண்டு
தாரை வார்த்தாய் காதலை,
அந்த காதலுக்கு நீதான் தாயென்பது தெரியவில்லையோ புரியலை.
காதலை வைத்த உன் வார்த்தைகளெள்ளாம் வர்ணங்களாய் என்னை கிள்ளியது,
காதலை தொலைக்க வந்த கடைசி வார்த்தை
என் கண்களில் நீராய் கொட்டியது.
பட்டாம்பூச்சி பறந்தோட
சிலந்தி வலையில் சிக்க கண்டேன்,
பட்டாம்பூச்சியோ நானும்
உன் சிந்தனை வலையில் சிக்கி கொண்டேன்.

எழுதியவர் : நாகராஜ் துளசிமணி (27-Aug-14, 8:49 pm)
பார்வை : 92

மேலே