பட்டுப்பூக்கள் உதிர்ந்தது

பட்டுப்பூக்கள் உதிர்ந்தது


பட்டுப்பூக்கள் உதிர்ந்தது - வானம்
விரிந்த சிறகில்
சில வெளிச்சங்கள்
கல் கூட்டில்
வாழும் முட்காடுகள்
வல்லினத்தின் வேர்கள்
உதடுகளைக் கிழிக்க
மூச்சு வாங்கும் சில
மொழிப் பிரளயங்கள்
கண்ணீரின் அளவுகோலைக்
கன்னங்கள் சேகரிக்க
வண்ணங்களைக் கேள்வி கேட்கும்
பார்வை நரம்புகள்
நகங்களீன் கீரல்களுக்குப் பழகிப்போன
சில சதைபிளந்த இரத்தங்கள்
நாய்களின் வேக அழைப்பை
ஏற்று காற்றானது
நேற்று கொடுத்த உயிரைக்
காவு வாங்கிய தருணம்
நிமிடங்களுக்குள் உருகிப்
போன காலக்கடிகாரம்
தீட்டிய முட்களில் உதிர்ந்த
சில ரோஜாக்கள்
வானவேடிக்கையின் போது
நிலவில் சரிந்த மண்ணை
வேடிக்கை பார்க்கும் அதிகார பிம்பம்
இத்தனை கற்றும் பற்றை விடாத மனமே!
கொஞ்சம் பற்றியிரு இறையை

எழுதியவர் : முனைவர் நீ பகவதியம்மாள் (11-Jul-14, 11:28 am)
சேர்த்தது : bhagavathiammal
பார்வை : 59

மேலே