என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி oo0oo சொ சாந்தி
எத்தனை நாள் தவம் கிடந்தேன்
பூமியினை முத்தமிட
தொட்டபோது சுட்டதென்னை
வெப்பமாகி கொதித்த மங்கை....
நானும்தான் வெப்பமானேன்
தட்பவெப்பம் மாறி வந்தேன்
கொதிப்பில் வந்த வியர்வையாகி
தூறி வைத்தேன் மழையாகி...
எந்தன் வரவு காணாமல்
எத்தனை பேர் அழுகையிலே
வந்துவிட்டேன் கலங்காதீர்
பசுமைதனை நானளிப்பேன்...
நான் நடந்த பாதையிலே
நட்டு வைத்த ரோஜா செடி
முள் குத்தி எனை அழவைத்தே
கொஞ்சியது மலர் முத்தமிட்டே....
வயல்வெளியை பார்வையிட்டேன்
சாய்ந்த கதிர் நிமிர்ந்து நின்று
சல்யூட் ஒன்றை இட்டு வைக்க
அந்த மரியாதையிலே குளிர்ந்தேன்...
புவி மனிதர் கொடுமையினால்
நான் பூமி காண முடியவில்லை
புகையனுப்பி வழிமறித்து
என் பாதையெல்லாம் கரிக்காடு
ஓட்டையிலே எதுவும் ஒழுகும்
ஓசோன் ஓட்டை மட்டும் எனை தடுக்கும்
வந்துவிழும் ஆசையிருக்கு
ஓட்டை வழியினிலே அடைப்பிருக்கு
விண்ணுயர்ந்த மரங்களெல்லாம்
எனை எப்போதும் வரவேற்கும்
மீண்டும் எப்போது வந்திடுவாய்
என்றேதான் வரம் கேட்கும்....
காணவில்லை மரங்களெல்லாம்
நானும் காணாமற் போகின்றேன்
வெப்பசலன மழையாகி
என்றாவது விழுகின்றேன்...
நின்று பெய்யும் மழையாக
நான் வந்து வந்து போக ஆசை
மரங்களெல்லாம் தழைக்குமென்றால்
பொழிந்திடுவேன் முகம் மலர்ந்தே...
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.