மன அருவி
![](https://eluthu.com/images/loading.gif)
அருவிக்கு
மழையின் கருணை
இலக்கியங்களுக்கு
கவிஞனின் கருணை.
கருணை பெருகி வர
அருவிகள் பெருகி ஓடும் !
குளிப்பார் இல்லையே என்று
மலையருவிகள் நின்று போவதில்லை !
படிப்பார் இல்லை என்றல் ஒருவேளை
மன அருவிகள் நின்று போகலாம் !
----கவின் சாரலன்