ஏழ்மை

ஊரெல்லாம் தினம் கால்கள்
ஓயாமல் நடந்த போது
பாதையில் சென்றவர்கள் - எம்மை
பார்க்க தினம் மறப்பதில்லை....

பாவம் என்று சொல்லி சிலர்
சில்லறையை வீசி செல்ல
பார்வையால் நன்றி சொல்லி
சிரிக்க நான் மறக்கவில்லை..

பச்சிளம் குழந்தையோடு
ஊரெல்லாம் கடந்த போது
பால் வாங்க காசு இல்லை
தவிக்கிறான் எனது பிள்ளை….

எச்சில் விழுங்கி பால் கொடுத்தேன்
ஏப்பம்விட்டு விழித்தானே
பசியில்லை என்று சொல்லும்
சிறிய பார்வை பார்த்து சிரித்தானே
அழகான என் அன்பு மகன்..

..

(இப்படி நாள்தோறும் தொடரும் இவர்கள்.....முடிவில்லா நீண்ட நெடும் பயணம்)

(கோ.எழிலன்)

எழுதியவர் : கவிஞன் கோ.எழிலன் (13-Jul-14, 12:03 am)
Tanglish : ezhamai
பார்வை : 117

மேலே