கற்றவை - பற்றவை

செம்மொழித் தமிழால்
கல்வியைக் கற்றேன் ...

சிறந்த பள்ளியால்
சிகரத்தை அடைந்தேன் ...

என் தந்தையிடம்
நடக்கக் கற்றேன் ...

என் தாயிடம்
பாசத்தைக் கற்றேன் ...

என் ஆசிரியையிடம்
வாழ்க்கையைக் கற்றேன் ...

என் தோழனிடம்
அன்பைக் கற்றேன் ...

என் தோழியிடம்
காதலைக் கற்றேன் ...

மற்றவர்களிடம் பழகி
உறவுகளைக் கற்றேன் ...

வானவில் மூலம்
வண்ணங்களைக் கற்றேன் ...

வலிமையான முயற்சியால்
வெற்றியைக் கற்றேன் ...

போர் வீரர்களிடமிருந்து
வீரத்தைக் கற்றேன் ...

தேனீக்கள் மூலம்
சுவையைக் கற்றேன் ...

சிற்பிகள் மூலம்
கலையைக் கற்றேன் ...

நம் முன்னோர்களிடமிருந்து
உழைப்பைக் கற்றேன் ...

வின்னைப் பார்த்து
உயரக் கற்றேன் ...

எழுதியவர் : முத்துப் பிரதீப் (13-Jul-14, 2:49 pm)
பார்வை : 104

மேலே