என் பயணத்தில்

தொடர் வண்டியில்
தொடர்கிறது என்பயணம்;
அடுத்தவர் அந்தரங்கம்
காணும் ஆசையில்
நடை பயின்றேன்;

முதல் பெட்டியில்,
ஒரு மானை
நான்கு அசிங்கங்கள் வேட்டையாடின,
எல்லோரும் மாபாதகம் என்றார்கள்;
நானும்…

அடுத்த பெட்டியில்
இரு ஓநாய்கள் சிறுமியை
சின்னாபின்னம் செய்துகொண்டிருந்தன,
அச்சச்சோ வண்புனர்வு என்றனர்;
நானும்….

மற்றொரு பெட்டியில்
இருவர் சண்டயிட்டுக்கொண்டு
அதிலொருவன் சாகும்வரை காத்திருந்து
வெனறவனை கொலைகாரன் என்றனர்;
நானும்…

இன்னொன்றில் இடிபாடுகளுக்கிடையில்
சிக்குண்டு மாண்டனர் பலர்;
பரிதாபம் என்றனர் சிலர்,
கயவனை சிறையிலிட கோரினர்;
நானும்….

வேறொரு நாயகன் வந்து
காப்பாற்றுவான் என நம்பிய
எல்லோரையும் போலவே..
நானும்…
தயாராகத் தானிருந்தேன்
அவனுக்கு கைகளைத் தட்ட….

எழுதியவர் : பசப்பி (14-Jul-14, 10:03 am)
Tanglish : en payanaththil
பார்வை : 120

சிறந்த கவிதைகள்

மேலே