பொன்னோவியத்தை என்று வரைவாய் இறைவா

அதிகாலையில் பொன்னொளியை
ரசிப்பவன் கவிஞன்
ஆழ்ந்து தோண்டி பொன்னைத்
தேடுபவன் வணிகன்
பெண் மேனியில் பொன் நிறம்
தீட்டுபவன் ஓவியன்
பெண் பொன் அணிந்து வந்தால்தான்
திருமணம் என்பவன் பேராசை மாப்பிள்ளை
புன்னகையே அணிதானே என்றல்
கைகூப்பி விடை பெறுவார் பிள்ளை வீட்டார்
மண்ணில் பெண்ணை வைத்தாய்
மண்ணுக்குள் பொன்னை வைத்தாய்
வாழ்க்கையை மனிதன் வணிக வீதி ஆக்கி விட்டான்
பொன்னை மனதினில் என்று வைப்பாய் ?
பெண்ணினத்திற்கு தேவை பொன் மனம்
அதிகாலையிலும் அந்தியிலும் ஓவியம் வரையும் நீ
பொன்னோவியத்தை மனித மனங்களில்
என்று வரைவாய் இறைவா ?
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Jul-14, 10:01 am)
பார்வை : 64

மேலே