+பூக்களோடு ஒரு கைக்குலுக்கல் 1+

பூக்களோடு ஒரு கைக்குலுக்கல்
============================

பூவுக்கொரு வாசமுண்டு 2
புன்னகைக்கும் சுவாசமுண்டு 4

ஆயுதங்கள் எடுத்தவரே 6
அஹிம்சை வழி திரும்பிடுவீர் 9

கோபம்தனை விட்டுவிட்டு 11
கொஞ்சும் மொழி கற்றிடுவீர் 14

சாபமாக போன வாழ்வை 17
சந்தோசமாய் மாற்றிடுவீர் 19

ஆனாதென்ன ஆயுதத்தால் 21
போனதிங்கே பல உயிர்கள் 24

கிடைத்ததென்ன உம் வாழ்வில் 27
உற்சாகமோ முன்னேற்றமோ 29

தீயவழி பயணப்பட்டால் 31
இருளும் வாழ்வில் சூழ்ந்திடுமே 34

நல்லவழி நாம் நடக்க 37
நன்மை மட்டும் கிடைத்திடுமே 40

கெட்ட செயல் அத்தனையும் 43
சுட்டெரித்து விட்டுவிட்டு 45

கட்டிடுவோம் கோட்டையொன்று 47
சமாதான செங்கல் வைத்தே 50

உம்மாலே அவதிப்படும் 52
உள்ளங்களை நினைத்திடுவீர் 54

கண்ணீரில் மூழ்கியிங்கே 56
துடிப்பதையும் கண்டிடுவீர் 58

உறவுகளையிழந்து அவர் 60
உழல்வதையும் பார்த்திடுவீர் 62

இத்தனையும் பார்த்து நீவீர் 65
கொஞ்சம் மனம் மாறிடுவீர் 68

மனிதனாக பிறந்துவிட்டு 70
மனிதனாக வாழாவிட்டால் 72

உனைப் படைத்த சாமியுமே 75
உனைப் பார்த்தே தலைகுனியும் 78

இப்படியே விட்டுவிட்டால் 80
வருங்காலம் நம்மை கேள்வி கேட்கும் 84

சபதமொன்று எடுத்திடுவோம் 86
சத்தமின்றிச் செயல்படுவோம் 88

இரக்கமில்லா மனிதருக்காய் 90
ஆண்டவனை வேண்டிடுவோம் 92

வாளெடுக்கும் மனதையெல்லாம் 94
பூக்களாக மாற்றிடுவோம் 96

மாறுமந்த‌ பூக்களையே 98
கைகுலுக்கி வரவேற்போம் 100

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (15-Jul-14, 4:09 pm)
பார்வை : 86

மேலே