உயிர் மட்டும் மிச்சமாய் - அரவிந்த் C

கத்தியின்றி ரத்தமின்றி
எனக்குள்ளே
யுத்தம் ஒன்று நடக்குதடி..

நீ இன்றி
கடக்கும் காலங்கள்
காயங்களை தருகுதடி..

சிரித்து திரிந்த
தருணங்கள் எல்லாம்
சோகம்தனை தெளிக்குதடி..

விரல் கோர்த்து
நாம் நடந்த சுவடுகளெல்லாம்
வேதனைகள் தருகுடடி..

கண்ணிரண்டில்
கத்தி வைத்து
கொல்கிறாய் என்னை..

கனவுகளில் வலிக்கிறது
அழுகிறேன் பச்சிளம் குழந்தையாய்
வலிகளை வருணிக்க வார்த்தைகள் ஏதும் இன்றி..

என்னை விட்டு
விலகி சென்றாய்
அதற்கு காரணங்களும் பல தந்தாய்..

ஆனால் உன்
நினைவுகள் மட்டும் என்னுள் நிலைத்து
நிலைகுலைய செய்யுதடி பெண்ணே..

பிறப்பின் அர்த்தம் அறிந்தேன் உன்னால்
ஆனால் இப்பொழுது
இறப்பின் வலி அறிகிறேன் உன் பிரிவால்..

மானம் கெட்டவனே
அவள் இன்றி நீ இல்லை பின் எதற்கு
வாழ்கிறாய் மாண்டுவிடு என்றது மூளை..

நான் இறந்தால்
என்னுடன்
என் காதலும் இறந்து விடும்..

நான் வாழ்ந்து
வாழவைக்க போகிறேன்
என் காதலை என்றது என் மனம்..

என் உயிரை இம்மண்ணில் நிலைநிறுத்தி
நித்தம் நித்தம் வளர்க்க போகிறேன்
என் காதலை உன் நினைவுகள் கொண்டு..

எழுதியவர் : அரவிந்த் .C (15-Jul-14, 4:31 pm)
பார்வை : 897

மேலே