மழையோடு கண்ணீர் கலக்குதடி உனக்காக 555
என்னவளே...
ஒவ்வொரு நாளும் என்னோடு
மணிகணக்கில் பேசி...
சிரித்து மகிழ்ந்த
மணித்துளிகள் எல்லாம்...
நிமிடங்களாக கரைந்ததடி
எனக்கு...
தபால்காரன் என்
வீட்டுக்கு வந்தால்...
உன் கடிதங்களும்
வாழ்த்து அட்டைகளும்
தவிர வேறேதுமில்லையடி...
என் கைபேசி
ஒலித்தால்...
உன் அழைப்புகளும்
உன் குறுஞ்செய்தியும் தவிர
வேறேதுமில்லையடி...
இன்று என் கைபேசி
ஒலித்தாலோ...
என் வாசலுக்கு தபால்காரன்
வந்தாலோ...
ஆவலோடு ஓடுகிறேன்
ஏமாற்றங்கள் மட்டுமே எனக்கு...
என்னோடு நீ
இல்லை என்பதை...
என்ன சொன்னாலும் ஏற்றுகொள்ள
மறுக்குதடி என் உள்ளம்...
தினம் நீ செல்லும்
சாலையில் காத்திருக்கிறேன்...
உன்முகம் காணவே...
என்னை கண்டால் சட்டென
கடந்து சென்று விடுகிறாய்...
ஊமையாக நிற்கிறேன்
சாலையின் ஓரத்தில் நான்...
நீ என்னை கடந்து செல்லும்
அந்த நொடியில்...
இந்த வானம் கூட மழையாய்
மாறி அழுகிறது பாரடி எனக்காக...
மழையோடு என் கண்ணீரும்
கலக்குதடி உனக்காக.....