ராகுல் - 1

வழக்கம் போலவே, மிக தாமதாமாக எழுந்தான் ராகுல். 'டேய்! எந்திரிடா, எப்போ பாரு லேட். படிக்கிற பையன்தான? பாரு உன் வயசுதான் ஆகுது அந்த கார்த்திக்கும், அது புள்ள. நீயும் தான் இருக்கியே! எந்திரிடா எரும மாடு' என்று சலித்து கொண்டாள் முத்து. 'என்னம்மா? இன்னும் கொஞ்சம் நேரம் மட்டும். ப்ளீஸ்மா' 'எப்பபாரு இதே தொல்ல! சீக்கிரம் கிளம்பு உங்க அப்பாக்கு சாப்பாடு கொடுக்கணும்'
இவைதான் இவர்களுக்கு இடையேயான வழக்கமான உரையாடல். ராகுல் இப்போதான் 4வது போறான்.
இன்னைக்கு முதல் நாள் வகுப்பு!

'டேய் தம்பி! குளிச்சியா?'
'குளிச்சிட்டேன் மா!'
'பல்லு விளக்குனியா?'
'ம்ம்ம்ம், விளக்கிடேனே'
'இங்க பக்கத்துல வா'
'என்னம்மா?'
'பல்ல காட்டு' கொஞ்சம் பயந்துதான் போனான் ராகுல். 'என்னடா பல்லு மஞ்ச பூத்து கிடக்கு? எப்ப பாரு பொய். என்னமோ பண்ணி தொல. மறக்காம அந்த ஆளுக்கு சாப்பாடு கொடுத்துட்டு போ'

தோளில் புத்தக மூட்டையும், கையில் தூக்கு சட்டியையும் சுமந்த வண்ணம் நடக்கலானான்.எப்பபாரு இந்த அம்மா திட்டிட்டே இருக்கு. நான்தான் சாப்பாடு கொடுக்கணுமா? அந்த குட்டையன் என்ன பண்றான்? கேட்ட சின்ன பையன்னு சொல்றாங்க! ச்சே!! என்று மனதுக்குள் நினைத்து கொண்டான்!
முத்து, மருதை காதல் திருமணம் செய்தவர்கள். காதல் திருமணம் செய்ததால் என்னவோ, அடைந்த கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. அவர்களுக்கு முத்தான மூன்று பிள்ளைகள். ராகுல், ராதா, விக்னேஷ். விக்னேஷ் கடைக்குட்டி என்பதால் என்னவோ செல்லம் அதிகம். கொஞ்சம் செட்டைகாரனும் கூட.

'அப்பா! சாப்பாடு எங்க வைக்க?'
'உள்ள வைடா'
'அம்மா! உன்ன மாட்டும் சாப்பிட சொல்லுச்சு. வேற யாருக்கும் கொடுக்க வேணாம்னு சொல்லுச்சு'
'ம்ம்ம்ம்ம்! சரி. ஒழுங்கா ஸ்கூல்க்கு போ! இந்த காசு'
'அப்பா'
'என்னடா?'
'வரப்ப'
'வரப்ப?'
'ஒன்னும் இல்ல'
'அட சொல்லுடா! என்ன வேணும்?'
'மாம்பலம் வாங்கிட்டு வாப்பா'
'ம்ம்ம்ம் சரி சரி. பாத்து பத்தரமா போ'

'யோ! மருதை, எதுக்குயா அவன ஸ்கூல்க்கு அனுபிட்டு. பேசாம நம்ம கடையில சேத்து விட்ட ஏதோ கொஞ்சம் காசும் வரும். தொழிலும் கத்துகிட்ட மாதிரி இருக்கும்ல! என்றார் கடை முதலாளி காந்தி.
' இல்லண்ணா, பையன் படிக்கட்டும். எத்தனை நாளைக்குதான் நானும் மூட்டை தூக்கிட்டே இருக்குறது.
நீங்க வேன பாருங்க அவன் நல்ல படிப்பான்' 'என்னமோயா, உன் இஷ்டம்! பத்துக்கோ. மதியத்துக்குள்ள எல்லா மூட்டையும் ஏத்திடு' 'ம்ம்ம் சரிண்ணா'

மணி : காலை 9

ராகுல் அதற்குள் பள்ளியை அடைந்திருந்தான். 3வது வகுப்பை கடந்து 4ம் வகுப்பு வந்து விட்டான். எல்லா பிள்ளைகளும் கலர் சட்டையில் வந்து இருந்தார்கள்.

'பசங்களா! எல்லாம் நாலாம் கிளாஸ் வந்துடீங்க. ஒழுங்கா படிக்கணும் சரியா?' என்றார் ஆசிரியர் அமுதவாணன். 'சரி சார்'
'நான் இந்த ஸ்கூல்க்கு புதுசு. என் பேரு அமுதவாணன். எல்லாம் வரிசையா உங்க பேரு. உங்க அப்பா அம்மா பேரு. உங்க அப்போவோட தொழில் எல்லாம் சொல்றீங்க. சரியா?' 'சரி சார்'
'ம்ம்ம் ஆரம்பீங்க'
'என் பெயர் கார்த்திக். எங்க அப்பா பேரு சரவணன். அம்மா பேரு கவிதா. அப்பா, பிசினஸ் பண்றார்'
'சிவா'
'சிக்கந்தர்'
'சரண்யா'
'அமுதா'
.
.
.
.
'ம்ம்ம் நீ சொல்லுப்பா' 'என் பேரு ராகுல். அப்பா பேரு மருதை. அம்மா பேரு முத்து'
'ம்ம்ம் அப்புறம்' கொஞ்சம் அமைதியாகவே சற்றும் முற்றும் பார்த்தவாறே இருந்தான் ராகுல்.
'ம்ம்ம் சொல்லுப்பா' மீண்டும் அமைதி.
'தம்பி, என்ன ஆச்சு? உங்க அப்பா என்ன பண்றார்?'
.
.
.

.
.

எழுதியவர் : Sherish பிரபு (15-Jul-14, 5:18 pm)
சேர்த்தது : Sherish பிரபு
பார்வை : 161

மேலே