ஓட்டபந்தயம்்்

அலுத்துக் கொண்டேன்
் விடியலை.....
இன்னொரு ஓட்டப்பந்தயம்!!
கடிகார முள்ளோடு
போட்டிப் போடும்்
காலை நேரத்தின் என் ஓட்டம்கணினி கூடத் தோற்றுப் போகும்!!
பொங்கி வழியும் போக்குவரத்தோடு
கபடி ஆடிய வெற்றிக் களிப்புடன்
வியர்வை குளியல் இலவச இணைப்பு!!
பிடித்த விளையாட்டு பம்பரம் விடுவது
என்று வேடிக்கையாய் சொன்னதிற்கு இன்றுசுழல்கிறேன்
அலுவல் கயிற்றினுள்!!
அந்தி மாலைப் பொழுதின் ஆனந்தமேஎனக்கு மட்டும்
ஏன் ஒர வஞ்சகம்்
காத்திருக்கும் வீட்டுத் தலைவி அவதாரம்!!
அடைக்கலம் புகுந்தேன் நித்திரைக்குள்்்
நிம்மதியான என் நிமிடங்களைநசுக்கிய
அலாரம் சத்தம்!!
அலுத்துக் கொண்டேன் விடியலை...
இன்னொரு ஓட்டப்பந்தயம் !!

எழுதியவர் : மது் (14-Jul-14, 7:12 pm)
பார்வை : 96

மேலே