உயிர்்~எழுத்துநீயடி

அ
அன்பே
அழகெல்லாம்
அசந்து போகும்்
அழகி நீயடி.!!
ஆ
ஆருயிரே - என்்
ஆயுள் - உன்்
ஆயுளின்்
ஆழத்தில் உள்ளதடி.!!
இ
இளையவளே
இனியவளே - உன்னால்்
இனிமயனதடி
இன்று என் வாழ்வு.!!
ஈ
ஈன்ற தாயின்்
ஈகையும் - காதலை
ஈன்ற உன்்
ஈகையும் எனக்கொன்று.!!
உ
உயிரே என்்
உயிராய்
்உள்ளவளே என்்
உயிரில் கலந்துவிட்டாய்.!!
ஊ
ஊமை என்னை
ஊஞ்சலில் ஆடவைத்தஎன்்
ஊதாப்பூவே நாம்
ஊர் போற்ற வாழ்வோம் வா.!!
எ
எந்தன்்
எதிர்காலம் நீஎனதெரியாமல்்
என்னை இழந்துவிட்டேன்.!!
ஏ
ஏன் இந்த வாழ்க்கை என
ஏங்கிய போது நீ வந்தாய்்
ஏழை நான் உன்னால்்
்ஏழு உலகமும் பெற்றேன்.!!
ஐ
ஐம்பூதம் ஆளும்்
ஐநிலங்கள் வாழ்த்தும்
்ஐம்பொறியோடுவரும் நீஎன்
ஐம்புலனில் உலவுகிறாய்.!!
ஒ
ஒருவனுக்கு
ஒருத்தியாய் வாழ்வோம்்
ஒரு நாள் வருவான்்
ஒளியாக எம் பிள்ளை.!!
ஓ
ஓவியமே உன்னைஎண்ணி
ஓயாமல்
்ஓடி என் இதயம்்்
ஓய்வின்றி துடிக்கிறது.!!
ஒள
ஒள என கெளவிடும்
்ஒளடவ ராகமே
ஒளவையின் தமிழேே
ஒளடதமதடி உன் அன்பு.!!