என்னை தாக்கிவிட்டாய்

நான் பார்த்த நொடியில்
பெண்ணே நீ என்னை
பார்த்தாயே - செத்து
பிழைத்தேனடி -நான் .....!!!

உன்
கண் கண்ணாக இருந்தால்
தப்பி இருப்பேன் - பார்வையோ
அணுமின் கதிர்போல் திரட்டி
என்னை தாக்கிவிட்டாய்....!!!

அன்பே உன் கண் என்ன ..?
சேனைப்படையா ...?
அத்தனையும் கொண்டு என்னை
தாக்கி விட்டாய் .....!!!

குறள் - 1082

தகையணங்குறுத்தல்

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

எழுதியவர் : கே இனியவன் (16-Jul-14, 1:57 pm)
பார்வை : 83

மேலே