முக அழகா இடையழகா

இதயம் தொலைத்து,
இமைகள் மூட மறந்த,
தருணம்!
கண்டேன்! பேரழகை!!!
மாற்றுலகத்து பிறப்போ?
மெய் மறந்து நின்றேனே!!
மாறி வந்த தேவதையோ?
வழி தவறி சென்றேனே!
மறைந்து நின்று நாணம் கொண்டேன்!
மதி மயங்கி பின் தொடர்ந்தேன்!!!

பூவுலகம் பொம்மைகள் ஆனதே!
பேரழகு என்னை கொல்லுதே!!
என்ன செய்ய இனி?
மூச்சிறைத்து முன்னேறி,
அவள் முக அழகை காணவா?
வளவுகளில் திரும்பும் போது,
அவள் இடையழகை ரசிக்கவா?
பாதத்தை பின் தொடர்ந்து,
பாதி தூரம் ஆயிற்றே!
பாவி மகள் முகம் காட்ட,
கால தாமதம் ஏனோ?

அவள் திரும்பிய, ஒரு நொடி!
திசை மாறி நின்றேனே!
இதய துடிப்பு அதிகமாக!
தலை கவிழ்ந்து நின்றேனே!
'ஹலோ' என்ற குரல் கேட்டு,
தயங்கித்தான் போனேன்!
'ஹலோ'
'ஹலோ'
.
.
.
.
.

.
'சார்! நேரம் ஆச்சு. பூங்காவ மூட போறோம்! கிளம்புங்க!

எழுதியவர் : sherish பிரபு (16-Jul-14, 3:32 pm)
பார்வை : 94

மேலே