ஏய்வயிேற

ஏய்! வயிறே!
மன்னித்துக் கொள் வயிறே!
மன்னித்துக் கொள்!
நான் என்ன
வைத்துக் கொண்டா
வஞ்சகம் செய்கிறேன்?
பொறுத்துக்
கொள்க வயிறே!
இரண்டு நாட்கள்தண்ணீர் கொடுத்தேனல்லவா?
இரு! இரு!
இப்போது தண்ணீர்
தருகிறேன்்
பொறுத்துக்
கொள்வறுமையில்
பிறந்த எனக்கு
பசி தானே
வாழ்க்கை பரிசு
உணவுகிடைத்தால்்
கொடுத்திருப்பேனே
நான் என்ன செய்வது?
உனது பசிக்குஉணவு தரவில்லைதான்்
அதற்காக கோபத்தில்ஏன் ஒத்துழையாமை செய்கிறாய்்உன்னுடைய ஒத்துழையாமையில்-ஏன்உடலின் மற்ற
உறுப்புக்களையும்உதவிக்கு அழைக்கிறாய்?
ஆதரவு கோருகிறாய்?
தனிக் கூட்டணி அமைக்க
ஏன் முற்படுகிறாய்
்ஏய் கண்களே!
நீங்கள் ஏன்
இயங்க மறுக்கிறீர்கள்?
ஓ!
நீங்களும் வயிற்றின்்
ஒத்துழையாமைக்கு
ஆதரவோ?
ஏய் கால்களே!
உங்களுக்கு
என்ன ஆனது?
ஏன் சோர்வடைகிறீர்கள்?
ஓ!
நீங்களும் வயிற்றின் பக்கமா?
அதுசரி!
எல்லோரும் சேர்ந்து
என்மேல்்
நம்பிக்கையில்லா
தீர்மானமா?
ஏய் மனமே!
நீ இரும்புதான்
போஇவ்வளவு பசிக் கொடுமையிலும்்
கையேந்தாதேயென்று
கையிற்கு
கட்டளையிடுகிறாய்
்நானிழிந்தால் நீயழிவாய்்
நீயழிந்தால்
நானழிவேன்நமது
உடலேஒரு கூட்டாட்சி தானேஎனது
உடலுறுப்புக்களே!
எனக்கு தீனி
கிடைத்தால்நாம்
உயிர்வாழ்வோம்
்இல்லையெனில்்
கரையானுக்குத்
தீனியாவோம்.....???

எழுதியவர் : சதீஷ் (16-Jul-14, 11:00 pm)
பார்வை : 71

மேலே