மன்னிக்க மாட்டேன்
கடற்கரையில் கால் நனைத்து
கண்ணீர் விட்ட சிறுமியின்
உள்ளம் குமுறியது.
"ஏ கடலே...
எத்தனை முறை என் காலில்
விழுந்து கெஞ்சினாலும்
உன்னை மன்னிக்க மாட்டேன்.
சுனாமியாய் வந்து
சுழற்றிச் சென்று
என்னிடமிருந்து
என் பெற்றோரை பிரித்த உன்னை."